About Me

'நான்' என்னும் மையத்தை மட்டுமே அச்சாகக் கொண்டு என்னையே சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.., இந்த பூமியைப் போல. ஆனாலும் என்னைச் சூழ்ந்திருக்கும் எண்ணிலடங்கா கோள்களை அவைகளின் கவனம் கலையாது கவனித்துக் கொண்டு, அவைகளின் தடயம் பதியாது தனித்து நிற்க விரும்புகிறேன். இருப்பினும் சில நட்சத்திரங்களின் தாக்கங்கள் என்னையும் அறியாமல் அவைகள் பால் ஈர்த்துக் கொள்கின்றன.., சூரியனைப் போல, சுற்றி வரச் செய்கின்றன. பல சுழற்சிப் பாதைகளின் சிக்கல்களினூடே, இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கான சிறு நிலாவினை.

Monday, January 21, 2008

சர்க்கரை
கரையாத
காப்பியின்
கடைசி
இனிப்பு மடக்குகள்
உணர்த்துகின்றன
சில வாழ்வியல் நியதிகளையும்,
பல சொலப்படாத தத்துவங்களையும்.

வழக்கம் போல,
அலட்சிய சப்தங்களோடு
உறிந்து குடிக்கிறேன்
கடைக்காரனை
சபித்துக்கொண்டே...

3 comments:

Bee'morgan said...

ரொம்ப நல்லா இருக்கு வீரு.. ஒரு மாதிரி பளிச்னு, ஆடம்பரம் இல்லாத சொற்கள்.. மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் இருக்கு.

bhupesh said...

Knock Knock

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

it's good man. i liked it.